Iraivaaதிருக்குறள்அன்புடைமை
அதிகாரம் 8அறத்துப்பால் (Book of Virtue)குறள் 71–80

அன்புடைமை

The Possession of Love

📖 அதிகார விளக்கம்
அன்புடைமை அதிகாரம் எல்லா அறங்களுக்கும் அடிப்படையாக அன்பை வைக்கிறது. அன்பில்லாத வாழ்க்கை வெறும் உடம்பின் இயக்கம் மட்டுமே; அன்புடையவர்களே பிறருடன் உறவாடி உலகை நலமாக்குவார்கள் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
🌐 Adhikaram Meaning
This chapter places love at the centre of all virtue. Without love, life becomes empty; with love, people become connected to others and capable of compassion.

இந்த அதிகாரத்தின் குறள்கள்

குறள் 71
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
Is there a bolt to lock love? The tears of the devoted lover will announce it.
குறள் 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
Those without love keep everything for themselves; those with love give even their bones to others.
குறள் 73
அன்போடு இயன்ற வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயன்ற தொடர்பு.
The connection of the precious life with the body — they say this is the connection that is made through love.
குறள் 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நன்புணர்வு நாடிய யாக்கை.
Love gives earnestness; earnestness gives good wisdom; good wisdom gives the body that seeks (liberation).
குறள் 75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.
The glory attained by those who have found joy in the world — they say this comes from conduct steeped in love.
குறள் 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
The ignorant say love belongs only to virtue; but it is also the support of valor/bravery.
குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
Just as the sun scorches a boneless creature, virtue scorches one who is loveless.
குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.
A life without love within is like a withered tree sprouting on a barren rock.
குறள் 79
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
What use are all the external organs of the body to those whose internal organ — love — is absent?
குறள் 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
Life exists through the path of love; for those without it, the body is just bones covered with skin.